2020 – 2021 தமிழ் புத்தாண்டு

சார்வரி ஆண்டுக்குரிய சித்தர் பிரான் இடைக்காடரின் பாடல்

சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள், மாரியில்லை
பூமி விளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமன்றிச் சாவார் இயம்பு

பொருள்

சார்வரி ஆண்டில், தீராத நோயால் அவதிப்படுவர், மழை குறைவாக இருக்கும் என்பதால், பூமியில் விளைச்சல் குறையும் சோகம் உண்டு. மக்கள் தாமாக வரக்கூடிய மரணமில்லாமல் சாவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் வருஷம்  இன்று  13  ஏப்ரல் 2020 இரவு 8.23 மணிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி கிருஷ்ணபட்சத்தில் சப்தமி திதி,  பூராடம் நட்சத்திரம் 1- ஆம் பாதம் தனுசு ராசியில்,  துலாம் லக்னத்திலும்,  நவாம்சத்தில் சிம்ம ராசியில்,  மிதுன லக்னத்திலும்,  புதன் ஓரை, சுக்கிர மகா தசையில் சுக்கிர புத்தியில்,  சார்வரி ஆண்டு பிறக்கிறது. பூராடம் என்றால் சற்று போராட வேண்டி இருக்கும். அதனால் சார்வரி ஆண்டான 2020 -21 சற்று அலைச்சல்களுடன், சிரமத்துடன் அனைவரும் இருப்பார்கள்.

இந்தாண்டு நவகிரகங்களின் பதவி

ராஜாபுதன்
மந்திரிசந்திரன்
சேனாதிபதிசூரியன்
அர்க்காதிபதிசூரியன்
மேகாதிபதிசூரியன்
ஸஸ்யாதிபதிகுரு
இராசாதிபதிசனி
நீரஸாதிபதிகுரு
தான்யாதிபதிசெவ்வாய்
பசுநாயகர்கிருஷ்ணர்

எளிமையான பரிகாரம்

மேஷம்

மேஷ ராசியினர் சிகப்பு துணியை தானம் செய்வது சிறப்பு.

ரிஷபம்

ரிஷப ராசியினர் பட்டுத்துணியை தானம் செய்வது சிறப்பு.

மிதுனம்

மிதுன ராசியினர் பச்சை நிற துணியை தானம் செய்வது சிறப்பு .

கடகம்

கடக ராசியினர் வெள்ளை துணியை தானம் செய்வது சிறப்பு.

சிம்மம்

சிம்ம ராசியினர் வெள்ளை துணியை தானம் செய்வது சிறப்பு.

கன்னி

கன்னி ராசியினர் பச்சை நிற துணியை தானம் கொடுப்பது சிறப்பு.

துலாம்

துலாம் ராசியினர் வெள்ளை பட்டுத்துணி தானம் செய்வது சிறப்பு.

விருச்சிகம்

விருச்சிகம் ராசியினர் சிகப்பு துணியை தானம் செய்வது சிறப்பு.

தனுசு

தனுசு ராசியினர் மஞ்சள் நிற துணியை தானம் கொடுப்பது மிகவும் சிறப்பு.

மகரம்

கருப்பு துணியை தானம் செய்வது சிறப்பு.

கும்பம்

கருப்பு துணியை தானம் கொடுப்பது சிறப்பு.

மீனம்

மீனம் ராசியினர் மஞ்சள் நிற துணியை தானம் கொடுப்பது மிகவும் சிறப்பு. மேற்குறிப்பிட்ட நிற துணியுடன் அந்த கிரகத்தின் தானியத்தை சேர்த்து தானம் செய்யும் போது, ஊருக்கும் நமக்கும் சகல சம்பத்துக்களும் உண்டாகும்.

தானத்தில் மிகவும் உயர்ந்த தானம் அன்னதானம்

மனித மனமே எதிலும் முழுமையாக திருப்தியடையாது. மனமானது ஒன்றை பெற்றுவிட்டால் அடுத்தவைக்கு ஏங்கும். பசித்த ஒருவன் சாப்பிடும்பொழுது மட்டும்தான் வயிறு நிறைந்தவுடன் மனமும் நிறைகிறது.

ஜோதிடர்

சௌ.மேகநாதன்,M.Com, M.A (ASTRO), D.A (ASTRO), A.D.A (ASTRO), TALI METHOD (ASTRO),